மே மாதத்தில் ஏர் இந்தியாவின் 5 மூத்த விமானிகள் கரோனாவுக்கு பலி 
இந்தியா

மே மாதத்தில் ஏர் இந்தியாவின் 5 மூத்த விமானிகள் கரோனாவுக்கு பலி

கடந்த மே மாதத்தில் மட்டும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஐந்து மூத்த விமானிகள் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

PTI

புது தில்லி:  கடந்த மே மாதத்தில் மட்டும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஐந்து மூத்த விமானிகள் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவியதால், ஏர் இந்தியா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மே 15-ஆம் தேதிதான் தொடங்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், தனியார் விமான சேவை நிறுவனங்களான விஸ்தரா மற்றும் ஏர் ஆசியா இந்தியா விமான சேவை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை 99 சதவீதம் செய்துமுடித்துவிட்டது.

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று மே மாத ஆரம்பத்திலிருந்தே ஊழியர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கரோனா தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவியதால், மே 15ஆம் தேதிதான் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT