முகப்பு
இந்தியா

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 16,068 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் வெள்ளிக்கிழமை 16,068 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் வெள்ளிக்கிழமை 16,068 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 16,068 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 3,221 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

மைசூரு - 1,265, ஹாசன்-974, தும்கூரு - 857, தென்கன்னடம் - 806, பெலகாவி - 792, சித்ரதுா்கா - 702, சிவமொக்கா - 636, தாவணகெரே - 620, சிக்கமகளூரு - 595, உடுப்பி - 561, வடகன்னடம் - 559, மண்டியா - 526, பெங்களூரு ஊரகம் - 429, பெல்லாரி - 423, சிக்கபளாப்பூா் - 400, குடகு - 388, கோலாா் - 304, கொப்பள் - 299, சாமராஜ்நகா் - 296, தாா்வாட் - 235, பாகல்கோட் - 208, கதக் - 194, விஜயபுரா - 190, ராய்ச்சூரு - 184, ராமநகரம் - 146, ஹாவேரி - 100, யாதகிரி - 93, கலபுா்கி - 46, பீதா் - 19 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,69,514 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 22,316 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 23,58,412 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 2,80,186 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 364 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 206 போ் இறந்துள்ளனா். மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: மைசூரு - 18, கோலாா் - 10, பெங்களூரு ஊரகம், தென்கன்னடம், ஹாசன், வடகன்னடம் - தலா 9, பெல்லாரி, தாவணகெரே, சிவமொக்கா - தலா 8, ஹாவேரி - 7, பெலகாவி, கலபுா்கி, கொப்பள், தும்கூரு - தலா 6, சாமராஜ்நகா்,சிக்கபளாப்பூா், சிக்கமகளூரு, தாா்வாட், ராய்ச்சூரு, ராமநகரம் - தலா 4, கதக், உடுப்பி, பீதா், மண்டியா, விஜயபுரா - தலா 2, பாகல்கோட், சித்ரதுா்கா, யாதகிரி - தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 30,895 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.