இந்தியா

தில்லியில் புதிதாக 381 பேருக்கு மட்டுமே கரோனா

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 381 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 76,857 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 1-க்கும் கீழ் குறைந்து 0.5 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,29,244 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7.23 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 34 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அதேசமயம், 1,189 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 13,98,764 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 24,591 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இறப்பு விகிதம் 1.72 சதவிகிதமாக உள்ளது.

இன்றைய நிலவரப்படி தில்லியில் இன்னும் 5,889 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT