இந்தியா

கேரளத்தில் புதிதாக 15,567 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் புதிதாக 15,567 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரள கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"மாநிலத்தில் இன்று 15,567 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,09,979 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 14.15 சதவிகிதம். இதுவரை மொத்தம் 2,06,88,146 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கடந்த நாள்களில் 124 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,281 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 85 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். 14,695 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 712 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20,019 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,04,011 பேர் குணமடைந்துள்ளனர். நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1,43,254 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT