இந்தியா

தில்லியில் புதிதாக 316 பேருக்கு மட்டுமே கரோனா

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 316 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள், குணமடைந்தவர்கள் உள்ளிட்டோர் பட்டியல் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக 316 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,29,791 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 521 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 41 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 14,00,161 பேர் குணமடைந்துள்ளனர். 24,668 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 4,962 பேர் மட்டுமே இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் (திங்கள்கிழமை) 0.36 சதவிகிதமாகப் பதிவான நிலையில் இன்று 0.44 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT