முகப்பு
இந்தியா

தில்லியில் 9, 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 9, 11 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து தில்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
தில்லியில் 9, 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து
பகிர்:

கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 9, 11 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து தில்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. 

எனினும் மாநில நிலைகளுக்கேற்ப தேர்வுகளை ஒத்திவைத்தும், ரத்து செய்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தில்லியில் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 9 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார். 

இடைக்கால தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும் என தில்லி அரசு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →