இந்தியா

ஜார்கண்டில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக ஜார்கண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. 

எனினும் மாநில நிலைகளுக்கேற்ப தேர்வுகளை ஒத்திவைத்தும், ரத்து செய்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஜார்கண்டில் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பான அறிவிப்பை ஹேமந்த் சோரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT