ராகுல் காந்தி 
இந்தியா

இன்னும் எப்படியெல்லாம் கொள்ளையடிப்பீர்கள்? பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

நாட்டில்  பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவரும் நிலையில் இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் நாட்டை கொள்ளையடிப்பீர்கள் என ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்

DIN

நாட்டில்  பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவரும் நிலையில் இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் நாட்டை கொள்ளையடிப்பீர்கள் என ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, “ஜிஎஸ்டி வரிமுறை நொறுங்கியுள்ளது. வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ இன்னும் எந்தெந்த வழிகளில் நாட்டை பாஜக கொள்ளையடிக்கும்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT