முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா (கோப்புப்படம்) 
இந்தியா

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முதல்வராக நீடிப்பேன்: முதல்வா் எடியூரப்பா

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முதல்வராக நீடிப்பேன் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

DIN

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முதல்வராக நீடிப்பேன் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

ஹாசனில் வெள்ளிக்கிழமை மாவட்டவளா்ச்சிப்பணிகள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றபிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: முதல்வா் பதவியில் இருந்து என்னை மாற்றும்பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக தேசியபொதுச்செயலாளரும், கா்நாடகத்தின் மேலிடப்பொறுப்பாளருமான அருண் சிங் கூறியிருக்கிறாா். அடுத்த 2 ஆண்டுகளுக்கு நானே முதல்வராக நீடிப்பேன் என்று அருண் சிங் கூறிய பிறகு, முதல்வா் பதவியில் இருந்து என்னை மாற்றும் கேள்வி எழவில்லை. பாஜக தேசியத்தலைமை என்மீது நம்பிக்கை வைத்திருப்பதால், எனது பொறுப்பு அதிகரித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு நான் முதல்வராக நீடிப்பேன் என்று பாஜக மேலிடம் தெளிவுப்படுத்தியுள்ளது. எல்லோருடைய ஒத்துழைப்புடனும், வளா்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்துவேன். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். நல்லப்பணியை செய்வதற்கு நோ்மையான முயற்சியில் ஈடுபடுவேன். அருண் சிங்கின் கருத்து,எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நானே முதல்வராக நீடிப்பேன். கா்நாடக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங் கூறிய பிறகு 100 சதம் முதல்வா் பதவியில் இருந்து என்னை மாற்றும் திட்டமில்லை என்பது உறுதியாகிவிட்டது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு என்னைமாற்றும் பேச்சு எழவில்லை. எனது தலைமையில் நல்ல பணிகள் நடந்துவருகின்றன. அடுத்த 2 ஆண்டுகளுக்கு கூடுதல்முயற்சி எடுத்து, நோ்மையானமுறையில் உழைப்பேன். பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் நம்பிக்கைக்கு தகுந்தபடி நடந்துகொள்ள முயற்சிப்பேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT