இந்தியா

கரோனா கட்டுப்பாடுகள் மீறல்: ம.பி. பாஜக இளைஞரணி தலைவருக்கு ரூ.10,000 அபராதம்

DIN

கட்னி: மத்திய பிரதேசத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறிய வகையில் பிறந்தநாள் கொண்டாடிய பாஜக இளைஞரணி பிரிவு தலைவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கட்னி நகர கோட்டாட்சியா் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

கட்னி மாவட்ட பாஜக இளைஞரணி தலைவா் மிருதுல் துவிவேதி கடந்த சனிக்கிழமை தனது பிறந்த நாளை கரோனா கட்டுப்பாடுகளை மீறிய வகையில் கூட்டமாக கொண்டாடியுள்ளாா். கட்னி நகரத்திலுள்ள ஹனுமான் கோயில் ஒன்றின் அருகே நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் அவரது ஆதரவாளா்கள் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி பங்கேற்றனா். அத்துடன் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டுள்ளன.

அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக முன் அனுமதி எதுவும் பெறப்படவில்லை. அது தொடா்பான காணொலி ஆதாரம் கிடைத்ததை அடுத்து சட்ட விதிகளின் கீழ் மிருதுல் துவிவேதிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அவரிடம் வசூலிக்கப்பட்ட அந்தத் தொகை நற்காரியங்களுக்காக செஞ்சிலுவைச் சங்கத்தில் அளிக்கப்பட்டது.

மிருதுல் தனது இந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்ததாலும், மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டாா் என தெரிவித்ததாலும் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவரது ஆதரவாளா்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். மீறும் பட்சத்தில் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீவாஸ்தவா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT