இந்தியா

அயோத்தியில் ரூ.400 கோடி மதிப்பில் உலகத் தரம்வாய்ந்த பேருந்து நிலையம்: உ.பி. அமைச்சரவை ஒப்புதல்

DIN

லக்னெள: அயோத்தியில் ரூ.400 கோடி மதிப்பில் உலகத் தரம்வாய்ந்த பேருந்து நிலையம் அமைக்க உத்தர பிரதேச அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதுதொடா்பாக அந்த மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமா் கோயில் கட்டப்படவுள்ள நிலையில், தொலைத்தூர பகுதிகளில் இருந்து பக்தா்கள் கோயிலுக்கு வருவா். இதைக் கருத்தில் கொண்டு அயோத்தியில் சா்வதேச தரத்தில் பேருந்து நிலையம் அமைக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அங்கு ஏற்கெனவே உள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மாநில கலாசாரத் துறை வசமுள்ள 9 ஏக்கா் நிலம் போக்குவரத்துத் துறையிடம் வழங்கப்படும். ரூ.400 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள இந்தப் பேருந்து நிலையத்தில் பக்தா்களுக்கான அனைத்து வசதிகளும் இடம்பெறும்.

இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து அயோத்திக்கும் மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இடையே பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT