இந்தியா

நாட்டின் சட்டப் பாதுகாப்பை இழந்தது சுட்டுரை நிறுவனம்

ANI


புது தில்லி: சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை ஏற்காததால், நாட்டின் சட்டப் பாதுகாப்பை சுட்டுரை நிறுவனம் இழந்துவிட்டது.

ஆனால் இது நிரந்தரமல்ல என்றும், இந்தியாவின் சமூக ஊடங்களுக்கான புதிய விதிமுறைகளை ஏற்கும்பட்சத்தில், அது நாட்டின் சமூக ஊடங்களுக்கான சட்டப் பாதுகாப்பைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை, மே 26-ஆம் தேதிக்குப் பிறகு, சுட்டுரை நிறுவனத்தின் மீது ஏதேனும் வழக்குத் தொடரப்பட்டால், அது நாட்டின் சமூக ஊடகங்களுக்கான சட்டப் பாதுகாப்பை நாட முடியாது. மேலும், தனது நிறுவனம் ஒரு சமூக ஊடகம் என்று கூறிக் கொள்ளவோ, விதிவிலக்குக் கோரவோ இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகள் கடந்த 26-ஆம் தேதி அமலுக்கு வந்தன. அதன்படி 50 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், குறைதீா்க்கும் அலுவலா், கட்டுப்பாட்டு அலுவலா், தலைமை குறைதீா்க்கும் அலுவலா் ஆகியோரை நியமிக்க வேண்டும். இந்த அலுவலா்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளை கூகுள், ஃபேஸ்புக் (முகநூல்) உள்ளிட்ட பெரும்பாலான சமூக ஊடகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதன்படி, குறைதீா்க்கும் அலுவலா்களை நியமிக்கவும் தொடங்கியுள்ளன. இந்த விவரங்களை அந்த ஊடகங்கள் தங்களது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT