முகப்பு
இந்தியா

தாராவியில் இன்று ஒருவருக்கு கரோனா பாதிப்பு

மும்பை தாராவியில இன்று ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

மும்பை தாராவிய்ல இன்று ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி மும்பை தாராவி. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியையும் கரோனா 2-ம் அலை விட்டுவைக்கவில்லை. இருப்பினும், அரசின் தீவிர நடவடிக்கையால் நோய் பரவல் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்டது. 
கடந்த ஏப்ரல் மாதம் 8-ம் தேதி, 99 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதே தாராவியில் கரோனா 2-ம் அலையின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. 
கடந்த 2 நாளாக ஒருவர்கூட தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்த தாராவியில் தற்போது ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 6 பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.