இந்தியா

லோக் ஜன சக்தி கட்சியின் தலைவராக பசுபதி குமார் பாரஸ் தேர்வு

லோக் ஜன சக்தி கட்சியின் புதிய தேசியத் தலைவராக பசுபதி குமார் பாரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

DIN

லோக் ஜன சக்தி கட்சியின் புதிய தேசியத் தலைவராக பசுபதி குமார் பாரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகனான சிராக் பாஸ்வான், கட்சிக்கும் மக்களவைக் குழுவுக்கும் தலைவராக இருந்தாா். கடந்த ஆண்டு பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் சிராக் பாஸ்வான் தலைமையில் லோக் ஜனசக்தி கட்சி, பாஜக கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. சிராக் பாஸ்வானின் முடிவு பசுபதிகுமாா் பாரஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. 
இதையடுத்து சிராக் பாஸ்வான் தலைமையிலான பிரிவு, பசுபதிகுமாா் பாரஸை ஆதரித்த 5 எம்.பி.க்களை கட்சியிலிருந்து நீக்கியது. மறுபுறம், பசுபதிகுமாா் பாரஸ் தலைமையிலான பிரிவு, கட்சியின் தேசியத் தலைவா் பதவியிலிருந்து சிராக் பாஸ்வானை நீக்கியது. இந்நிலையில் லோக் ஜன சக்தி கட்சியின் செயற்குழு கூட்டம் பாட்னாவில் இன்று நடைபெற்றது. 
அதில், லோக் ஜன சக்தி கட்சியின் புதிய தேசியத் தலைவராக பசுபதி குமார் பாரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பசுபதி குமார் பாரஸ் கூறுகையில், "நான் தேசியத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். 
இந்த பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றார். தற்போது சிராக் பாஸ்வான் மற்றும் பசுபதிகுமாா் பாரஸ் என இருவா் தலைமையிலான பிரிவுகளும் கட்சியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 
அடுத்தகட்டமாக இரு தரப்பும் தங்களை உண்மையான லோக் ஜன சக்தி கட்சியாக அங்கீகரிக்கக் கோரி தோ்தல் ஆணையத்தை நாடும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்நாடக வனவிலங்கு பூங்காவில் மேலும் 2 அரிய வகை மான்கள் உயிரிழப்பு

ரெட் வெல்வெட்... அமைரா தஸ்தூர்!

வங்கக்கடலில் நவ.22ல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!

கலைமாமணி புகைப்படங்களைப் பதிவிட்டதில் தாமதம் ஏன்? சாய் பல்லவி விளக்கம்!

SCROLL FOR NEXT