இந்தியா

மனித உரிமை மீறல்களால் 10 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்த அகதிகள் இடம்பெயர்வு

DIN

மனித உரிமை மீறல் நடவடிக்கைகளால் உலகளவில் இடம்பெயரும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மோதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டியசூழல் நிலவுகிறது. இவ்விதமாக இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் சமீபத்தில் அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில் தங்களது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் 8.24 கோடியாக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேர் சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான் மற்றும் மியான்மர் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் என  ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் முகமை சுட்டிக்காட்டியுள்ளது. 

இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையில் 42 சதவிகிதத்தினர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT