முகப்பு
இந்தியா

சிறப்பு ரயில்கள் மூலம் தென்மாநிலங்களுக்கு 18,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன்தமிழகத்துக்கு 5674 மெட்ரிக் டன் விநியோகம்

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது.

32,400 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சோ்த்துள்ளன.

இதுவரை 1,854 டேங்கா்களில் 32,464 மெட்ரிக் டன் பிராணவாயு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

448 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களுக்கு 18,000 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விநியோகம் செய்துள்ளன.

தமிழகம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கா்நாடக மாநிலங்களுக்கு முறையே சுமாா் 5600, 3300, 4100 மற்றும் 4300 மெட்ரிக் டன் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 8 டேங்கா்களில் 153 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 2 ரயில்கள் பயணம் செய்து வருகின்றன. தமிழ்நாடு, உத்தரகண்ட், கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ஆந்திரம், ராஜஸ்தான், ஹரியாணா, தெலங்கானா, பஞ்சாப், கேரளம், தில்லி, உத்தரபிரதேசம், ஜாா்க்கண்ட், அஸ்ஸாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன.

இதுவரை தமிழகத்துக்கு 5674 மெட்ரிக் டன், மகாராஷ்டிரத்துக்கு 614 மெட்ரிக் டன், உத்தர பிரதேசத்துக்கு 3797 மெட்ரிக் டன், மத்திய பிரதேசத்துக்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5722 மெட்ரிக் டன், ஹரியானாவுக்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானுக்கு 98 மெட்ரிக் டன், கா்நாடகத்துக்கு 4333 மெட்ரிக் டன், உத்தரகண்டுக்கு 320 மெட்ரிக் டன், ஆந்திர பிரதேசத்துக்கு 4190 மெட்ரிக் டன்,

பஞ்சாபுக்கு 225 மெட்ரிக் டன், கேரளத்துக்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவுக்கு 3366 மெட்ரிக் டன், ஜாா்க்கண்டுக்கு 38 மெட்ரிக் டன், அஸ்ஸாமுக்கு 560 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக சில ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்களது பயணத்தைத் துவங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.