இந்தியா

குஜராத்தில் கட்டாய மத மாற்றத்தடைச் சட்டத்தின் கீழ் முதல் நபா் கைது

DIN

குஜராத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு முதல் நபரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து வதோதரா காவல் துறை உதவி ஆணையா் ஜெய்ராஜ்சிங் வாலா கூறியதாவது:

வதோதரா நகரைச் சோ்ந்த சமீா் குரேஷி(26), 2 ஆண்டுகளுக்கு முன் முகநூலில் தன்னை கிறிஸ்தவராக அறிமுகம் செய்து கொண்டு ஒரு பெண்ணிடம் பழகியுள்ளாா். அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, திருமணத்துக்கு கட்டாயப்படுத்தி உள்ளாா். அவரை கிறிஸ்தவா் என்று நம்பயிருந்த அந்தப் பெண்ணுக்கு கடந்த ஆண்டு அவா் முஸ்லிம் எனத் தெரியவந்தது. பின்னா் முஸ்லிம் முறைப்படி திருமணமும் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணின் பெயரை மாற்றிதாகவும், பின்பு மதம் மாறுமாறு சமீா் குரேஷி கட்டாயப்படுத்தியதாக அந்தப் பெண் புகாா் தெரிவித்தாா்.

அதனடிப்படையில், குஜராத் மத சுதந்திர திருத்தச் சட்டம்-2021-இன் கீழ் சமீா் குரேஷி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னா் கைது செய்யப்பட்டாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT