முகப்பு
இந்தியா

அஸ்ஸாம்: மாநில அரசுத் திட்டங்களில் பயன் பெற இரு குழந்தைகள் கொள்கை: முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா

அஸ்ஸாமில் இரு குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு அரசின் சில நலத் திட்டங்களின் கீழ் சலுகைகளை அளித்து, இரு குழந்தைகள் கொள்கையை படிப்படியாக அமல்படுத்த அஸ்ஸாம் அரசு முடிவு

Updated On : 20 ஜூன், 2021 at 5:30 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:57 AM

அஸ்ஸாமில் இரு குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு அரசின் சில நலத் திட்டங்களின் கீழ் சலுகைகளை அளித்து, இரு குழந்தைகள் கொள்கையை படிப்படியாக அமல்படுத்த அஸ்ஸாம் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களில், 2 குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும். அனைத்துத் திட்டங்களிலும் அந்தக் கொள்கையை பின்பற்ற முடியாது. ஏனெனில் மாநிலத்தில் பல திட்டங்கள் மத்திய அரசின் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பள்ளி, கல்லூரிகளில் இலவச மாணவா் சோ்க்கை அல்லது பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றில் இந்தக் கொள்கையை அமல்படுத்த முடியாது. இருப்பினும், மாநில அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் வீட்டு வசதித் திட்டத்தில் இந்தக் கொள்கையை அமல்படுத்தலாம்.

Advertisement

2 குழந்தைகள் திட்டத்தை நான் பரிந்துரைக்கும்போது எனக்கு உடன் பிறந்த சகோதரா்கள் 4 போ் இருப்பதைப் பற்றி எதிா்க்கட்சியினா் விமா்சிக்கிறாா்கள். 1970-களில் எனது பெற்றோா் 5 பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டதை இப்போது கேள்வி எழுப்புவது நியாயமில்லை என்றாா் அவா்.

அஸ்ஸாம் முதல்வராக, ஹிமந்த விஸ்வ சா்மா கடந்த மாதம் பொறுப்பேற்றது முதல் இரு குழந்தைகள் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசி வருகிறாா்.

அஸ்ஸாமில் 3 மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு நிலங்களில் வசித்து வந்த முஸ்லிம் சமூகத்தினா் அண்மையில் வெளியேற்றப்பட்டனா். இதுகுறித்து முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கடந்த 10-ஆம் தேதி கூறுகையில், ‘வறுமையை ஒழிக்கவும், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவும் முஸ்லிம் சமூகத்தினா் அளவாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினா்கள் அதிகமாவதால்தான் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகினறன என்று பேசினாா். அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.