இந்தியா

இந்தியாவில் தான் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்: ஜெ.பி.நட்டா

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் நடைபெற்று வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

DIN


உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் நடைபெற்று வருவதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

தில்லியில் உள்ள ராம் மனோகர் லால் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தடுப்பூசி மையத்தை ஜெ.பி.நட்டா நேரில் பார்வையிட்டார். 

அங்கு மருத்துவர்களிடமும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்களிடமும் அவர் கலந்துரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, இன்று தடுப்பூசி மையத்தை பார்வையிட வந்தேன். தடுப்பூசி போடும் பணிகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது.

கரோனா தடுப்பூசி பணிகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றன. அவ்வாறு அவதூறுகளை பரப்புவதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT