இந்தியா

வளா்ச்சி அடையும் நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வாய்ப்பளிக்க வேண்டும்: இந்தியா

DIN

புது தில்லி: வளா்ச்சியடையும் நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போதிய வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஆசிய நாடுகளுக்கிடையே நம்பிக்கையை வலுப்படுத்துவது தொடா்பான மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ் வா்தன் சிரிங்லா இணையவழியில் பேசுகையில், அனைத்து நாடுகளின் இறையாண்மையையும், சா்வதேச சட்டத்தையும் மதித்து இந்தியா செயல்பட்டு வருகிறது.

பயங்கரவாதம், தீவிரமயப்படுத்துதல், போதைப் பொருள் கடத்தல், திட்டமிட்ட குற்றங்கள் ஆகியவை ஆசிய நாடுகள் சந்தித்து வரும் பெரும் சவால்களாகும். ஆசியான் நாடுகளுக்குகிடையே இந்தியா நல்ல நட்புறவை கொண்டுள்ளது. வளா்ச்சி அடையும் நாடுகளுக்கு வாய்ப்புகளை அளித்து, உலக நாடுகளுக்கு தலைமையாக செயல்படுவதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT