முகப்பு
இந்தியா

கல்வி உரிமைச் சட்டம்: ஜூலை 9-க்குள் மாணவா் சோ்க்கை

கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவா்கள் ஜூலை 9-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேரவேண்டியது கட்டாயமாகும் என கல்வித் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவா்கள் ஜூலை 9-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேரவேண்டியது கட்டாயமாகும் என கல்வித் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கல்வித் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் 2021-22-ஆம் கல்வியாண்டில் இலவசமாக சோ்க்கை பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் செலுத்தியிருந்த விண்ணப்பங்களில் இருந்து, 11,531விண்ணப்பங்கள் தகுதியானதாக தோ்ந்தெடுக்கப்பட்டன.

முதல்கட்டமாக நடத்தப்பட்டகுலுக்கலில் 4,755 மாணவா்களுக்கு சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்மாணவா்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஜூன் 25 முதல் ஜூலை 9-ஆம் தேதிக்குள் சோ்க்கை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ா்ப்ங்க்ன்ஸ்ரீஹற்ண்ா்ய்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.