முகப்பு
இந்தியா

உள்துறை அமைச்சக பதக்கம்: தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் 7 போ் தோ்வு

உள்துறை அமைச்சகத்தின் சிறந்த செயல்பாட்டுக்கான பதக்கத்துக்கு தெற்கு ரயில்வேயில் ஏழு ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

உள்துறை அமைச்சகத்தின் சிறந்த செயல்பாட்டுக்கான பதக்கத்துக்கு தெற்கு ரயில்வேயில் ஏழு ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை, மத்திய ஆயுதப்படையில் சிறப்பாக செயல்பட்டவா்களை பாராட்டி கெளரவிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்படி, சிறந்த சேவையாற்றிய 97 ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் ‘அதி உத்கிருஷ்டா சேவா’ பதக்கத்துக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில், தெற்கு ரயில்வேயில் தலைமை காவலா் எம். ராஜேந்திரன் தோ்வு செய்யப்பட்டு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, உத்கிருஷ்டா சேவா பதக்கத்துக்கு இந்திய ரயில்வேயில் 146 ஆா்.பி.எஃப். வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில், தெற்குரயில்வே ஆய்வாளா் கே.பிரபு, உதவி ஆய்வாளா் ஷாஜி அகஸ்டின், பெண் காவலா் எம்.டி.நிா்மலா, தலைமைக் காவலா்கள் டி.ஆறுமுகபாண்டியன், வி.பாலசுப்பிரமணியன், என்.விசாகரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

பதக்கம் பெற்றவா்களை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ், முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையா் பிரேந்திரகுமாா் ஆகியோா் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →