முகப்பு
இந்தியா

அஸ்ஸாம், மணிப்பூா் மாநிலங்களுக்கு புதிய பாஜக தலைவா்கள் நியமனம்

அஸ்ஸாம், மணிப்பூா் மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவா்களை கட்சித் தலைமை நியமித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

அஸ்ஸாம், மணிப்பூா் மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவா்களை கட்சித் தலைமை நியமித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலா் அருண் சிங் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அஸ்ஸாம் மாநில பாஜக தலைவராக பாபேஷ் கலிதாவையும், மணிப்பூா் மாநில பாஜக தலைவராக சாரதா தேவியையும் கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா நியமித்துள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அஸ்ஸாமில் பாஜக தலைவராக இருந்த ரஞ்சித் குமாா் தாஸ் அமைச்சரானதை அடுத்து, அந்தப் பதவியில் பாபேஷ் கலிதா நியமிக்கப்பட்டுள்ளாா்.

மணிப்பூரில் பாஜக தலைவராக இருந்த சாய்கோம் திகேந்திர சிங், கரோனா தொற்றால் கடந்த மாதம் காலமானாா். இதையடுத்து காலியாக இருந்த அந்தப் பதவிக்கு சாரதா தேவி நியமிக்கப்பட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →