ஜம்மு விமானப்படைத் தளத்தில் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.
விமானப்படை தளத்தை சேதப்படுத்திய குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீா் விமான நிலையத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் ட்ரோன்கள் மூலமாக இரட்டை வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் நேற்று முன் தினம் (ஜூன் 27) விமானப்படை வீரா்கள் இருவா் காயமடைந்தனா்.
இந்த தாக்குதலில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
இந்நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.