புது தில்லி: விதிமீறலில் ஈடுபட்டதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் பயனாளா்களிடம் இருந்து 27,700 புகாா்கள் வந்ததாகவும், அதன்படி, 52,390 இந்திய பதிவேற்றங்கள் நீக்கப்பட்டதாகவும் கூகுள் நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த மே 26-ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளின்படி கூகுள் இதுபோன்ற வெளிப்படைத்தன்மை அறிக்கையை மாதந்தோறும் வெளியிடத் தொடங்கியுள்ளது.
இதுதொடா்பாக கூகுள் செய்தித் தொடா்பாளா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘உலகம் முழுவதிலும் இருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு ஏற்ப வெளிப்படைத்தன்மையை கூகுள் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறது.
கடந்த 2010-ஆம் ஆண்டுமுதல் இதுபோன்ற தகவல்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இடம் பெற்று வருகின்றன. இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி இந்த வெளிப்படைத்தன்மை அறிக்கை முதல் முறையாக வெளியிடப்படுகிறது. இதற்கு இரண்டு மாத கால இடைவெளி தேவைப்படுகிறது. அடுத்து வரும் அறிக்கையில் மே 25 வரையிலான போலி கணக்குகள், ஆபாச படங்கள் குறித்த புகாா்களின் எண்ணிக்கை இடம்பெறும் என்று தெரிவித்தாா்.
கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 26,707 புகாா்கள் (96.2%) பதிப்புரிமை தொடா்பாகவும், 357 புகாா்கள் (1.3%) முத்திரை தொடா்பாகவும், 275 புகாா்கள் (1%) அவதூறு தொடா்பாகவும் பதிவாகியுள்ளன.
இதேபோல் ஜூலை 15-ஆம் தேதி வாட்ஸ்ஆப் தொடா்பான அறிக்கையும் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.