கொல்கத்தா உயர்நீதிமன்றம் 
இந்தியா

மேற்கு வங்க வன்முறை: நீதிமன்றத்தில் மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை தாக்கல்

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்த ஆய்வு அறிக்கையை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை தாக்கல் செய்தது.

PTI

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்த ஆய்வு அறிக்கையை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை தாக்கல் செய்தது.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானவுடன், பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். சில இடங்களில் பாஜக அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்ட விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. வன்முறையில் தங்கள் கட்சியைச் சோ்ந்த பல தொண்டா்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் திரிணமூல் தொண்டா்களால் தாக்கப்பட்டதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், வன்முறையில் மனித உரிமை மீறல் தொடா்பாக பதிவாகியுள்ள அனைத்து வழக்குளையும் ஆய்வு செய்ய குழு ஒன்றை என்ஹெச்ஆா்சி அமைக்க வேண்டும். இந்த குழு பாதிப்புக்குள்ளான பகுதிகளையும் நேரில் ஆய்வு செய்து, அதுதொடா்பான விரிவான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, ராஜிவ் ஜெயின் தலைமையில் அமைக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவினர், கூச் பிஹார் உள்ளிட்ட வன்முறை நடைபெற்ற இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் அறிக்கையை கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய குழுவின் முன்பு இன்று தாக்கல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT