இந்தியா

தில்லியில் மீண்டும் கட்டுப்பாடு: காய்கறி சந்தை மூடப்பட்டது

DIN

தில்லியில் லட்சுமி நகர் காய்கறி மற்றும் பல்பொருள் விற்பனை சந்தை கரோனா பரவலால் மீண்டும் மூடப்பட்டது.

தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா இரண்டாவது அலை குறைந்து வந்த நிலையில், தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் சந்தை மூடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை அதிகரித்து வந்த நிலையில், தொடர் பரிசோதனை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றால் இரண்டாவது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தலைநகரான தில்லியிலும் தொற்று பாதிப்பு மூன்று இலக்கங்களுக்குள் குறைந்துள்ளது. அதனால் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தில்லி லட்சுமி நகர் பல்பொருள் சந்தையில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கரோனா விதிகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனால், அந்த சந்தையை ஜூலை 5-ம் தேதி வரை மூட தில்லி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT