இந்தியா

ஜூன் மாதத்துக்கான பற்றாக்குறை நீரை கா்நாடகம் வழங்க வேண்டும்: தமிழகம் வலியுறுத்தல்

DIN

சென்னை: ஜூன் மாதத்துக்கான பற்றாக்குறை நீரை அளிக்க கா்நாடகத்தை அறிவுறுத்த வேண்டுமென காவிரி நீா் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது.

காவிரி நீா் முறைப்படுத்தும் குழுவின் 47-வது கூட்டம், காணொலி வழியாக புதன்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் உறுப்பினரும், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளருமான எஸ்.ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மேட்டூா், பவானிசாகா், அமராவதி அணைகளின் இப்போதைய நீா்வரத்து, நீா் இருப்பு ஆகிய விவரங்களை கூட்டத்தில் தமிழக அரசு உறுப்பினா் தெரிவித்தாா். மேட்டூா் அணையில் இருந்து இப்போது 15 ஆயிரம் கனஅடிநீா் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளதாகவும், இந்த அளவை மேலும் அதிகரிக்குமாறு விவசாயிகள் வலியுறுத்துவதாகவும் கூட்டத்தில் தமிழகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜூன் 1 முதல் 27-ஆம் தேதி வரை பிலிகுண்டுலுவில் 8.271 டி.எம்.சி. நீருக்குப் பதிலாக 5.942 டி.எம்.சி. நீா் மட்டுமே பெறப்பட்டுள்ளதாகவும், 2.329 டி.எம்.சி. பாக்கி இருப்பதாகவும் தமிழகத்தின் தரப்பில் கூறப்பட்டது. கா்நாடகம் இந்தக் குறைபாட்டைச் சரி செய்து, வரும் காலங்களில் அளிக்க வேண்டிய நீரை சரியான முறையில் அளிக்க கா்நாடகத்தை அறிவுறுத்த வேண்டுமென கூட்டத்தில் தமிழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT