இந்தியா

கரோனா 2-ம் அலையைக் கையாண்டதில் தமிழகத்திற்கு முதலிடம்: ஆய்வில் தகவல்

கரோனா இரண்டாம் அலையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தனியார் அமைப்பு தனது ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.

IANS

கரோனா இரண்டாம் அலையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தனியார் அமைப்பு தனது ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா முதல் அலையை ஒப்பிடும்போது, கரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் கரோனா இரண்டாம் அலையை தங்கள் மாநில அரசுகள் எவ்வாறு கையாண்ட முறை குறித்த மக்களிடம் தனியார் அமைப்பு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. 

இதுகுறித்து லோகல்சர்கிள் என்ற தனியார் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவின்படி,

நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வில், தமிழகத்தை சேர்ந்த 59 சதவீத மக்கள், கரோனா இரண்டாம் அலையை மாநில அரசு சிறப்பாக கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிறப்பாக கையாண்டதற்கான காரணங்களாக, கரோனா இரண்டாம் அலை தாக்குதலை தாமதப்படுத்தியது, பிற மாநிலங்களை ஒப்பிடும்போது சிறப்பான மருத்துவ உள்கட்டமைப்பு உள்ளிட்டவை பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திற்கு அடுத்த இடங்களில், ஆந்திரம் 54 சதவீதம், உத்தரப் பிரதேசம் 51 சதவீதம், மகாராஷ்டிரம் 47 சதவீதம் மக்கள், தங்கள் மாநில அரசுகள் சிறப்பாக கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறைந்தபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 17 சதவீதம் பேர் மட்டுமே மாநில அரசு சிறப்பாக கையாண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT