இந்தியா

மம்தாவுடன் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு

DIN


ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை திங்கள்கிழமை நேரில் சந்தித்தார்.

மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அமைக்கவுள்ளதாகப் பேச்சுகள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது திரிணமூல் மூத்த தலைவர்கள், அமைச்சர் ஹகிம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல், பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால், அங்கு மும்முனைப் போட்டி நிலவுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மம்தா, தேஜஸ்வி சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT