உ.பி.யில் பெண், 2 குழந்தைகள் உயிருடன் எரித்துக் கொலை 
இந்தியா

உ.பி.யில் பெண், 2 குழந்தைகள் உயிருடன் எரித்துக் கொலை

உத்தரப் பிரதேசத்தில் பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் தீ வைத்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

IANS

உத்தரப் பிரதேசத்தில் பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் தீ வைத்து உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கார்ப்பரேட்டர் ஜிதேந்திர யாதவின் மனைவி அர்ச்சனா (29), அவரது 5 வயது மகள் அக்ஷிதா மற்றும் 15 மாத மகன் ஹனு மீது வீட்டின் அருகில் வசிக்கும் அவனேஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். 

அர்ச்சனா சமையலறையில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஜிதேந்திரா வீட்டின் மற்றொரு பகுதியிலிருந்தபோது அவளுடைய இரண்டு குழந்தைகளும் அவளுடன் அமர்ந்திருந்தனர்.

அப்போது, திடீரென்று அவனேஷ் சம்பவ இடத்திற்கு வந்து, அர்ச்சனாவையும் இரண்டு குழந்தைகளையும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டதும், ஜிதேந்திராவும், அக்கம்பக்கத்தினரும் மூவரையும் மீட்டு விரைந்து மருத்துவமனைக்குச் சென்றனர். பின்னர், காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

சிகிச்சை பலனின்றி குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். மனைவி, கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார். 

குற்றம் சாட்டப்பட்டவர், பெண் கான்ஸ்டபிள் உஷாவின் கணவரான 25 வயதான அவனேஷ் பிரஜாபதி ஆவார். குற்றத்தைச் செய்த பின்னர் தப்பியோடும்போது நெடுஞ்சாலையில் வேகமாக வந்த வாகனம் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கான்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எரிக்கப்பட்டதற்கான உண்மை காரணத்தை காவல்துறை கண்காணிப்பாளர் கான்பூர் தேஹாத், கேசவ் குமார் சவுத்ரி விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT