இந்தியா

ரூ.77,814 கோடிக்கு அலைக்கற்றை ஏலம் நிறைவு

DIN

தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. மொத்த ஏலத் தொகை ரூ.77,814.80 கோடியாக இருந்தது. இதில் ரூ.57,122 கோடி மதிப்பிலான அலைக்கற்றையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கியது.

தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. 7 வித வரிசைகளில் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டன. ஒட்டுமொத்தமாக ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான 2,250 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டன.

தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. அதில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோட
ஃபோன் ஐடியா நிறுவனங்கள் பங்கேற்றன. ஏலம் குறித்து மத்திய தொலைத்தொடர்புத் துறை செயலர் அன்ஷு பிரகாஷ் கூறுகையில், "2 நாள்கள் நடைபெற்ற ஏலத்தில் 855.60 மெகா ஹெர்ட்ஸ் மதிப்பிலான அலைக்கற்றைகள் ரூ.77,814.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டன.

அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 488.35 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ.57,122.65 கோடிக்கு ஏலம் எடுத்தது. பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.18,698.75 கோடிக்கும், வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ.1,993.40 கோடிக்கும் அலைக்கற்றையை ஏலத்தில் பெற்றன.

ஏலம் விடப்பட்ட மொத்த அலைக்கற்றையில் 37 சதவீதம் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டன'' என்றார்.

ஏலம் விடப்பட்ட அலைக்கற்றை 20 ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில், 41 சதவீத அலைக்கற்றை 7 நிறுவனங்களால் ஏலம் எடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT