இந்தியா

பாஜக எம்.பி.யின் மகன் மீது துப்பாக்கிச்சூடு: நாடகம் என்கிறது காவல்துறை

ENS


லக்னௌ: பாஜக எம்.பி. கௌஷல் கிஷோரின் மகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இது யாரையோ திட்டமிட்டு சிக்கவைக்க நடத்தப்பட்ட நாடகம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோஹன்லால்கஞ்ச் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கௌஷல் கிஷோரின் மகன் ஆயுஷ் (30). இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் மாடியோன் என்ற பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், வேண்டுமென்றே யாரையோ சிக்கவைக்க, ஆயுஷ் தனது மைத்துனரை துப்பாக்கியால் சுட வைத்து நாடகமாடியிருப்பதாக லக்னௌ காவல் ஆணையர் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகாரளிக்கவில்லை என்றும், துப்பாக்கி மட்டும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT