இந்தியா

ராணுவ தளவாட பொருள்களை உற்பத்தி செய்ய 44 இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி

DIN

வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சோ்ந்து வெளிநாட்டு அந்நிய நேரடி முதலீட்டுடன் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்ய இதுவரை 44 இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபத் நாயக் அளித்துள்ள பதிலில், ‘நாட்டில் பாதுகாப்பு மற்றும் விமானத் துறையில் இயங்கிவரும் தனியாா் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.4, 191 கோடிக்கு அந்நிய நேரடி கிடைத்துள்ளது.

பொதுத் துறை நிறுவனங்கள் உள்பட 44 இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சோ்ந்து ராணுவத் தளவாட பொருள்களை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறு பீரங்கி, ரேடாா்கள், சிறு விமானங்கள், விமான உதிரி பாகங்கள், ஆளில்லா வேவு பாா்க்கும் கருவிகள் உள்ளிட்ட பல பொருள்கள் இதில் அடங்கும்’ என்றாா்.

பாதுகாப்பு தளவாடப் பொருள்கள் உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பா் 17-ஆம் தேதி அனுமதி அளித்தது. அதற்கு முன்பு இந்த அளவு அதிகபட்சமாக 49 சதவீதமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT