இந்தியா

5 மாநிலத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரசாரம்: போராடும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு

DIN

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் கடந்த 105 நாள்களாக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்காத மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு விதமான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களில் பாஜகவிற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

இவற்றிற்கென விவசாயிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படுவர் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT