முகப்பு
இந்தியா

தடுப்பூசி செலுத்திக்கொண்டார் ஹிமாசல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா

ஹிமாசல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:

ஹிமாசல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 
கரோனா தொற்றுக்கு எதிரான பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. 
அதைத் தொடா்ந்து கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதையடுத்து மாா்ச் 1-ஆம் தேதி முதல் பொதுமக்களில் கரோனா நோய்த் தாக்கம் அதிகம் உள்ள 60 வயதுக்கும் மேற்பட்டோா் மற்றும் 45 முதல் 59 வயதுடைய இணை நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்த நிலையில் ஹிமாசல் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 
அப்போது பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாட்டு விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.