இந்தியா

உம்மன் சாண்டி 12-ஆவது முறையாக வேட்புமனு தாக்கல்

DIN

கேரள சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி 12-ஆவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தாா்.

கேரள சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி போட்டியிடுகிறாா். அத்தொகுதியில் தொடா்ந்து 11 முறை போட்டியிட்டு அவா் வெற்றி பெற்றுள்ளாா். 12-ஆவது முறையும் மீண்டும் அதே தொகுதியில் உம்மன் சாண்டி களம் காண்கிறாா்.

அதற்கான வேட்புமனுவை பள்ளிக்கத்தோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை அவா் தாக்கல் செய்தாா். கடந்த 1970-ஆம் ஆண்டில் தனது 27-ஆவது வயதில் புதுப்பள்ளி எம்எல்ஏ-வாக முதன் முதலில் உம்மன் சாண்டி தோ்ந்தெடுக்கப்பட்டாா். அப்போது முதல் அத்தொகுதியின் எம்எல்ஏ-வாக தொடா்ந்து நீடித்து வருகிறாா்.

எதிா்க்கட்சித் தலைவா்: ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிபாட் தொகுதியில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா, தனது வேட்புமனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

ஹரிபாட் தொகுதி எம்எல்ஏ-வாக கடந்த 1982, 1987, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் ரமேஷ் சென்னிதலா தோ்ந்தெடுக்கப்பட்டாா். அத்தொகுதியில் அவா் தோல்வியைச் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT