நாகாலாந்தில் மார்ச் 22 முதல் தொடக்கப் பள்ளிகள் திறப்பு 
இந்தியா

நாகாலாந்தில் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறப்பு

நாகாலாந்து மாநிலத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

நாகாலாந்து மாநிலத்தில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 22 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பின்னர் கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து மத்திய அரசு அளித்த தளர்வுகளின்படி மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்து வருகின்றன.

அந்தவகையில் நாகாலாந்து மாநிலத்தில் மார்ச் 22 முதல், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்பின் போது மாணவர்கள் கட்டாயம் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாகாலாந்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல், 6 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT