கரோனா பரவலால் சூரத்தில் இரவு பொதுமுடக்க நேரம் நீட்டிப்பு
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் அதிகரித்துவரும் கரோனா பரவலால் இரவு நேர பொதுமுடக்க நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் அதிகரித்துவரும் கரோனா பரவலால் இரவு நேர பொதுமுடக்க நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலால் பல்வேறு நகரங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேரப் பொதுமுடக்கத்தின் நேரம் 9 மணியிலிருந்து 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரவு 10 மணியிலிருந்து 5 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.