கேரளத்தில் புதிதாக 2,078 பேருக்கு கரோனா
கேரளத்தில் புதிதாக 2,078 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் புதிதாக 2,078 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"மாநிலத்தில் புதிதாக 2,078 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 102 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 58,777 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 3.54 சதவிகிதமாக உள்ளது.
Advertisement
மேலும் 15 பேர் கரோனா தொற்றால் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,482 பேர் பலியாகியுள்ளனர்.
2,211 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 10,72,554 பேர் குணமடைந்துள்ளனர். 25,009 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."