மகாராஷ்டிரத்தில் மேலும் 27,126 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 27,126 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 27,126 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,588 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 92 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 24,49,147 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22,03,553 பேர் குணமடைந்துள்ளனர். 53,300 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 1,91,006 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
அங்கு இறப்பு விகிதம் 2.18 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 89.97 சதவிகிதமாக உள்ளது.