நாக்பூரில் ஊரடங்கு: சொந்த ஊருக்குப் படையெடுத்த புலம்பெயர் தொழிலாளர்கள்
நாக்பூரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களது சொந்த மாநிலம் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
நாக்பூரில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்களது சொந்த மாநிலம் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
கரோனா பரவல் காரணமாக நாக்பூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
Advertisement
தற்போது ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளதால், மகாராஷ்டிர மாநிலத்தில் தங்கி பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு படையெடுத்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்காக நாக்பூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
பேருந்து போக்குவரத்து முழுவதும் தடை செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், இன்றே சொந்த மாநிலத்திற்கு செல்வதாக புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.