மகாராஷ்டிரத்தில் 30 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு
மகாராஷ்டிரத்தில் புதிதாக 30,535 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 30,535 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு பெரிதளவில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 24,79,682 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 11,314 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 22,14,867 பேர் குணமடைந்துள்ளனர்.
Advertisement
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 99 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 53,399 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலையில் 2,10,120 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறப்பு விகிதம் 2.15 சதவிகிதமாக உள்ளது. குணமடைவோர் விகிதம் 89.32 சதவிகிதமாக உள்ளது.