முகப்பு
இந்தியா

முகக்கவசம் அணியாத 4,400 பேருக்கு கரோனா பரிசோதனை: பஞ்சாப் காவல்துறை அதிரடி

பஞ்சாப் மாநிலத்தில் முகக்கவசம் அணியாத 4,400க்கும் மேற்பட்டோர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:48 PM
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாப் மாநிலத்தில் முகக்கவசம் அணியாத 4,400க்கும் மேற்பட்டோர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் முகக்கவசம் அணியாத 4,400க்கும் மேற்பட்டோர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

Advertisement

மேலும், முகக்கவசம் அணியாத காரணத்திற்காக 1,800 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 12,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தாங்களே இலவசமாக முகக்கவசம் வழங்கியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்வோரை ஆர்டி-பிசிஆர் சோதனை உட்படுத்துமாறு முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டதை அடுத்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். 

மேலும், கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும், முகக்கவசம் அணிந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் பொதுமக்களிடம் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments