தில்லியில் ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு
தில்லியில் புதிதாக 1,101 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் புதிதாக 1,101 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 1,101 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,49,973 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 620 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
Advertisement
இதுவரை மொத்தம் 6,34,595 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 10,967 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 4,411 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.