அயோத்தியில் பேருந்து விபத்து: 6 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி சாலையில் பேருந்தும் டிரக்கும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி சாலையில் பேருந்தும் டிரக்கும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ரௌஜா கிராமத்தின் ஓவர் பிரிட்ஜில் இரண்டு வழிச் சாலைகளில் ஒன்றன்பின்னால் ஒன்று பேருந்து சென்றுகொண்டிருந்தது. கான்பூரிலிருந்து பஸ்திக்கு இரண்டு பேருந்துகளும் சென்று கொண்டிருந்தன. அப்போது, எதிரே வந்த டிரக் பயங்கரமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 4 பேர் சிகிச்சையின் போது மாவட்ட மருத்துவமனையில் பலியானதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Advertisement
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார் மற்றும் காயமடைந்த பயணிகளுக்குச் சிகிச்சை மற்றும் உதவி வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இறந்தவரின் உறவினர்களுக்கு தலா ரூ .5 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.