மகாராஷ்டிரத்தில் புதிதாக 28,699 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 28,699 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 28,699 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக புணேவில் 5,722 பேருக்கும், மும்பையில் 3,512 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13,165 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 132 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,33,026 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22,47,495 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 53,589 பேர் பலியாகியுள்ளனர். 2,30,641 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.