இந்தியா

கரோனா பரவல்: மாநில அரசுகள் கட்டுப்பாடு விதிக்கலாம்

DIN

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மாநில அரசுகள் உள்ளூர் ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஹோலி, ஈஸ்டர் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாநில அரசுகள் கட்டுப்பாடு விதிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மாநில சுகாதாரத்துறையுடன் இயங்கும் வகையில் மத்திய அரசு குழுவையும் அனுப்பியுள்ளது.

எனினும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் உள்ளூர் ரீதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

அதில், ஹோலி, ஈஸ்டர் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாநில அரசுகள் கட்டுப்பாடு விதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுமா ஆர்சிபி?

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

SCROLL FOR NEXT