கேஜரிவாலின் பணிகளைப் பார்த்து பிரதமர் மோடி பாதுகாப்பற்று உணர்கிறார்: மணீஷ் சிசோடியா
தில்லி முதல்வர் கேஜரிவாலின் பணியைப் பார்த்து பிரதமர் மோடி பாதுகாப்பற்றதாக உணர்வதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் கேஜரிவாலின் பணியைப் பார்த்து பிரதமர் மோடி பாதுகாப்பற்றதாக உணர்வதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
தில்லி அரசு (திருத்த) மசோதா, 2021 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா,
அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது பணிகளைப் பார்த்து பிரதமர் மோடி பாதுகாப்பற்றதாக உணர்கிறார். அதனாலேயே அவர் இப்படியொரு மசோதாவை நிறைவேற்றியுள்ளார். கேஜரிவால் முன்னேறுவதைத் தடுக்க இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று எதிர்மறை அரசியல் செய்கிறார். அவருடைய அரசியலுக்கு விரைவில் பதில் கிடைக்கும். மசோதா குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.
முதல்வர் கேஜரிவால் ஒரு போராளி, கடந்த ஆறு ஆண்டுகளில் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். எனவே மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
தில்லி அரசு (திருத்த) மசோதா, 2021 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 22-ல் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடும் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி யூனியன் பிரதேச நிா்வாகத்தில் துணைநிலை ஆளுநருக்கு முதன்மை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்தவொரு நிா்வாக நடவடிக்கை தொடா்பாக முடிவு எடுக்கும் முன்னா், அதுகுறித்து துணைநிலை ஆளுநரின் கருத்தை தில்லி அரசு பெற வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது