இந்தியா

இலங்கையில் மார்ச் 29 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: கல்வி அமைச்சகம்

IANS

தலைநகர் கொழும்பு உள்பட நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் 29-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க இலங்கை கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

கரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக கடந்த அக்டோபரில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைகளைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் மார்ச் 29-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்பெரீஸ் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

மேற்கு மாகாணங்களில் தொற்று நோய் அதிகரித்ததைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டது. தொற்று பாதிப்பு குறைந்துள்ளது நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

அதன்படி மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் 29 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து சுகாதார நெறிமுறைகளும் கட்டாயம் பின்பற்றப்படும் என்று அவர் கூறினார். 

இலங்களை மொத்த பாதிப்பு 90,765 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 552 ஆகவும் உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT